கேரளாவில் இன்றும் 33 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (19:19 IST)
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,803 என்றும் கொரோனாவால் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,610 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 38,38,614 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,961 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,29,912 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று பகல் நேர ஊரடங்கு அமல் படுத்தியும் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்