ஒரு மாத சம்பளத்தை ஓகி புயல் நிவாரணத்திற்கு கொடுத்த அமைச்சரவை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (14:24 IST)
ஓகி புயலால் பாதிப்படைந்த கேரள மீனவர்களுக்கு அம்மாநில அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
சமீபத்தில் ஏற்பட்ட ஓகி புயலால் தமிழகத்தின் தென்பகுதியான கன்னியாகுமரி மற்றும் தெற்கு கேரளா ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. இப்புயலின் கோர தண்டவத்தால் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். கேரளா மற்றும் தமிழகத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் ஓகி புயலில் சிக்கி காணாமல் போயினர். அவர்களை மீட்டுத் தரக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இறந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர்  பிரனாயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், கேரளா மாநிலத்தின் அமைச்சரவை உறுப்பினர்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை, ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்