குப்பை கொட்டுபவர்களை காட்டி கொடுத்தால் பரிசு! – அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (16:32 IST)
கேரளாவில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் குறித்து தகவல் தந்தால் பரிசு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.



கேரளாவில் போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கேரளாவில் சமீபத்தில் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராக்கள் விதிகளை மீறுபவர்களுக்கு தானாக அபராதம் விதித்து வருகிறது.

இந்நிலையில் சுத்தமான பொதுவெளிகளை பேணுவதில் கேரளா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுவெளியில் குப்பை கொட்டும் நபர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கேரள அரசு எச்சரித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்