மகேந்திரன் தன் வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் வீதி உலாவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அருகே வந்த ஒரு சாரை பாம்பு அவரை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பாம்பை அடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த பாம்பை ஒரு பையில் போட்டு கொண்டு நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவர் பாம்புடன் இருந்ததைப் பார்த்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.