தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி சிட்ஃபண்ட் மோசடி! தகவல் கொடுத்தால் சன்மானம்!

வெள்ளி, 25 நவம்பர் 2022 (08:37 IST)
தமிழகத்தில் நிதி நிறுவனங்கள் நடத்தி மக்களிடம் ஏராளமான பணத்தை பெற்று ஏமாற்றிய மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் என காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைக்காட்டி அதிக பணத்தை ஏமாற்றிய நிறுவன அதிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அந்த வகையில் முக்கியமாக ஆரூத்ரா கோல்டு, ஹிஜாவு அசோசியேட்ஸ், எல்.என்.எஸ் சர்வதேச நிதி சேவை உள்ளிட்ட பல நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிறுவனங்கள் மக்களிடம் பணத்தை பெற்றுவிட்டு மாதம்தோறும் வட்டி மற்றும் முதலீட்டு தொகையையும் தராமல் ஏமாற்றியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அந்த வகையில் இந்த நிதித்துறை நிறுவனங்களில் நடத்திய சோதனையில் ரூ.9 ஆயிரம் கோடி பொது மக்களின் பணத்தை ஏமாற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தேடப்பட்டு வரும் நிதி நிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்