ரஷ்ய ராணுவத்தில் 3 கேரள இளைஞர் ஏமாற்றி சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் இந்த போரில் ரஷ்ய இராணுவத்தில் சில இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷ்யாவுக்கு சுற்றுலா சென்றவர்களை ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்து வலுக்கட்டாயமாக போரில் ஈடுபட வைப்பதாகவும் குற்றம் காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் கேரளாவை சேர்ந்த டினோ, பிரின்ஸ் மற்றும் வினித் ஆகிய மூன்று பேர் ரஷ்ய ராணுவத்தில் சிக்கி இருப்பதாகவும் போர்க்களத்தில் சிக்கி உள்ள இந்த மூன்று பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்
இதையடுத்து இது குறித்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.