பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தது. பாஜக அரசு அறிவித்தபடி, நேற்று முன்தினம் சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம், விசிக உள்ளிட்ட கட்சி தலைவர்களும், தமிழ் நாடு- முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கம் -முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளம்- முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட முதல்வர் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், சிஏஏ பற்றி குறிப்பாக தமிழ் நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த மா நில கட்சிகள் வெறுப்புணர்வு தூண்டுவதை நிறுத்த வேண்டும் என்று இன்று டெல்லியில் பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத் பேட்டியளித்திருந்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியே; பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் 3 கோடி சிறுபான்மையினர் உள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவது யார்? எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய நாட்டிற்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.