திராவிடமும், கம்யூனிசமும் இணைந்து செயல்படுவோம்! – வாழ்த்து சொன்ன கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பதில்!

Prasanth Karthick

வெள்ளி, 1 மார்ச் 2024 (12:05 IST)
இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து வாழ்த்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வரும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று. காலை முதலே பிரதமர் மோடி உள்ளிட்ட பல தேசியக்கட்சி தலைவர்களும், பிரமுகர்களும், மாநில கட்சியினரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் தெரிவித்த வாழ்த்துகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்திக்கு “வாழ்த்தியமைக்கு நன்றி” என சிம்பிளாக முடித்தவர், கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாழ்த்து செய்திக்கு விரிவான நன்றி பதிலை எழுதியுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது வாழ்த்து செய்தியில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழர் மு.க.ஸ்டாலின்! நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் முடிவில்லாத மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற விரும்புகிறேன்!” என தெரிவித்திருந்தார்.

ALSO READ: ஸ்டாலினுக்கு தான் பயம் வந்திருச்சு.. பிரதமருக்கு வந்த கூட்டத்தை பார்த்தபின் உதறல்: வானதி சீனிவாசன்

இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே! திராவிடம் மற்றும் கம்யூனிசத்தின் ஆழமான கொள்கைகளிலிருந்து உத்வேகம் பெற்று, விளிம்புநிலை மற்றும் பாட்டாளி வர்க்கத்தை உயர்த்தும் உன்னத முயற்சியில் கைகோர்ப்போம். நமது மதிப்பிற்குரிய அரசியலமைப்பில் பொதிந்துள்ள விழுமியங்களைப் பாதுகாக்கவும் போற்றவும் நாம் கூட்டாகப் பாடுபடுவோம். இந்தப் பயணத்தில் உங்கள் ஆதரவும் ஊக்கமும் விலைமதிப்பற்றவை” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்