இன்று முதல் UPI பயனர்களுக்கு புதிய விதிகள் அமல்.. என்னென்ன மாற்றங்கள்?

Siva

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (09:26 IST)
கூகுள் பே, ஃபோன்பே போன்ற UPI செயலிகளை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய NPCI சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் சீராகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதற்காக இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
 
இன்று முதல் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கு பிறகும், வங்கிகள் பயனர்களுக்கு பேலன்ஸ் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும்.
 
ஒரு பயனர் தனது வங்கி கணக்கு இருப்பை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே UPI செயலி மூலம் சரிபார்க்க முடியும். அதேபோல், செயலியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் தகவலை ஒரு நாளில் 25 முறைக்கு மேல் பார்க்க முடியாது. 
 
பரிவர்த்தனை நிலை: ஒரு பரிவர்த்தனையின் நிலையை அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும். ஒருமுறை சரிபார்த்த பிறகு, அடுத்த முறை சரிபார்க்க 90 விநாடிகள் காத்திருக்க வேண்டும்.
 
EMI அல்லது கடன் தவணைகள் போன்ற தானியங்கி பணம் பிடித்தம் இனி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நடைபெறும். 
 
பண பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலும், கல்வி அல்லது மருத்துவச்சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் வரையிலும் அனுப்ப முடியும்.
 
இந்த புதிய விதிமுறைகள், UPI பண பரிவர்த்தனைகளை வேகமாகவும், தடையின்றியும் மேற்கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்