ராணுவ ஆட்சியை நாங்களே முடிச்சிக்கிறோம்.. விரைவில் மக்கள் தேர்தல்! - மியான்மர் ராணுவத் தலைவர் அறிவிப்பு!

Prasanth K

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (09:29 IST)

மியான்மரில் கடந்த 4 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான மக்களாட்சி நடைபெற்று வந்த நிலையில், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி 2021ல் சூகியின் ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே எழுந்த மோதலில் பலர் பலியானார்கள்.

 

தொடர்ந்து மக்கள் போராட்டம் நடந்துக் கொண்டே இருக்கும் நிலையில் மியான்மரில் அமைதி நிலை திரும்ப வேண்டும் ஐநா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மியான்மர் ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங் “தேர்தலில் மோசடி நடந்ததால்தான் ஆட்சிக் கலைக்கப்பட்டது. நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்படும் தலைவர்களிடம் மீண்டும் முழு அதிகாரமும் ஒப்படைக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு பின் இந்த 4 ஆண்டு ராணுவ ஆட்சி முடிவுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்