கேரளாவில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமாக இருந்த ஒரே சொத்தான ஒரு ஏக்கர் நிலத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள வடக்கு கன்னூர் மாவட்டம் பையனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சுவாகாவும், அவரது சகோதரரும் இணைந்து கேரள முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். இதுகுறிட்து பள்ளி முதல்வர் மூலமாக அவர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதற்கு சகோதரர்களின் தந்தையும் சம்மதம் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சகோதரர்கள் ஒரு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்க இருப்பதற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.