கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்தது. இதனால் அணைகள் நிரம்பி மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.
தற்போது மழை குறைந்துள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இன்று முதல் கொச்சியில் இருந்து விமான சேவையும் துவங்கியது.
மழையின் காரணமாக 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அதிதீவிர பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.