'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டசபையில் எதிர்ப்பு தீர்மானம் போட்ட கேரள முதல்வர்..

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (08:04 IST)
மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது அனைத்து சட்டமன்றத்துக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகம் உள்பட சில மாநிலங்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து வருகின்றன. கேரளாவில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'க்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. '

ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க கூடாது, மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் பேசினார். கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தகர்த்துவிடும் என்றும், இந்த திட்டம் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலத்தை குறைக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்