பிரதமர் மோடி கொடுத்த கிரீடம் திருட்டு: வங்கதேச காளி கோவிலில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (08:00 IST)
சமீபத்தில் வங்கதேச நாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற போது அங்குள்ள காளிதேவி கோயிலுக்கு பிரதமர் மோடி கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார். தங்கம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் தற்போது திருடு போய்விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை கோவிலை திறந்த பூசாரி தினசரி பூஜையை முடித்துவிட்டு மதியம் கிளம்பியதாகவும், மதியம் இரண்டு முதல் இரண்டு முப்பது மணிக்குள் இந்த திருட்டு நடந்ததாகவும், இது குறித்து முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காளி கோவில் கிரீடத்தை திருடி, திருட்டை கண்டுபிடிக்க சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்