இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்கள் புகார்: பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

Mahendran

வியாழன், 10 அக்டோபர் 2024 (16:02 IST)
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா மீது அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 
 
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பி.டி. உஷாவுக்கும் சங்கத்தின் உறுப்பினர் குழுவினர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறியதாக பி.டி. உஷா குற்றஞ்சாட்டி, அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 
 
ஆனால், தலைவருக்கு உள்ள அதிகாரத்தை பி.டி. உஷா தன்னிச்சையாக செயல்படுத்துகிறார் என்று உறுப்பினர்கள் கூறிய நிலையில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய விளையாட்டு துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பி.டி. உஷா செயல்பட்டதாக தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், வரும் 25ஆம் தேதி இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்