காவிரி - குண்டாறு இணைப்புக்கு கர்நாடகா எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (18:14 IST)
மேகதாது அணையை கர்நாடக மாநில அரசு கட்டியே தீருவோம் என்று கூறி வரும் நிலையில் தமிழக அரசு மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்று கூறி வருகிறது
 
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 2008ஆம் ஆண்டு திட்டமிட்ட காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2008ஆம் ஆண்டு ரூபாய் 3290 கோடியில் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. காவிரி கொள்ளிடம் ஆறுகளில் உபரியாக கடலில் கலக்கும் 40 டிஎம்சி நீரை பயன்படுத்தும் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென தற்போது காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து காவிரி குண்டாறு திட்டத்திற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்