மார்க்கண்டேய நதியில் அணை: அதிமுகவின் அலட்சியமே காரணம்!

செவ்வாய், 6 ஜூலை 2021 (12:28 IST)
மார்க்கண்டேய நதியில் அணை: அதிமுகவின் அலட்சியமே காரணம்!
மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு அணை கட்டவதற்கு முந்தைய அதிமுக அரசின் அலட்சியமே காரணம் என காங்கிரஸ் எம்பி செல்லகுமார் தெரிவித்துள்ளார்
 
மார்க்கண்டேய அணையால் அதிகம் பாதிக்கப்படுவது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் என்று கூறிய செல்லகுமார் எம்பிஏ, அதிமுகவின் அலட்சியத்தால் தன் கையை தானே தனது கண்களை குத்திக் கொண்ட நிலையில் உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார் 
மார்க்கண்டேய நதி அணை குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு தரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யார்கொல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணை குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செல்லகுமார் என்று கேட்டுக்கொண்டுள்ளார் 
 
மேலும் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய நீரை பெற்றுத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மார்க்கண்டேய நதி விவகாரத்தில் கர்நாடக அமைச்சர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்