இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின்வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்யும் நீதிபதி திடீரென விலகி உள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி பிரயோன் பீஸ் என்பவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில், டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்பதற்கு முன்னர் ஜனவரி 10ஆம் தேதி தான் பதவி விலகுவதாக அவர் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த மாதம் பதவியேற்க இருக்கிறார். தற்போது அதிபர் ஜோ பைடனால் நியமனம் செய்யப்பட்ட இந்த நீதிபதி அதானி வழக்கு உட்பட வழக்குகளை கையாள வேண்டிய நிலையில் இருக்கிறார் என்ற நிலையில் திடீரென பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.