உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

Prasanth Karthick

சனி, 21 டிசம்பர் 2024 (09:19 IST)

உக்ரைன் உடனான போரை நிறுத்துவது பற்றி ஆலோசிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த 2 ஆண்டு காலமாக போர் நடந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் இறந்துள்ளனர். உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உதவி வரும் நிலையில், ரஷ்யாவும் வடகொரிய ராணுவத்தை போரில் ஈடுபடுத்தியுள்ளது.

 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், தான் பதவிக்கு வந்தவுடன் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவேன் என கூறியிருந்தார். அதற்கேற்றார் போல ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புதினும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் போரின் தீவிரம் குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 6 நாட்டு தூதரகங்கள், ஒரு பழமையான தேவாலயம் தாக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன்னே கடும் சேதங்களை விளைவிக்க ரஷ்யா திட்டமிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்