இந்தியாவில் இணைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு 6.69 லட்சத்திற்கும் அதிகமான சிம் கார்டுகளையும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஐஎம்இஐ எண்களையும் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அதே நேரத்தில், இணைய குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மோசடி பேர்வழிகள் ஆன்லைன் வழியாக மிரட்டி பணம் பறிப்பது, டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பணம் பறிப்பது ஆகியவை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த நவம்பர் 15ஆம் தேதி வரை 6.69 லட்சத்துக்கு அதிகமான சிம் கார்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் எம் ஐஎம்இஐ எண்களையும் முடக்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சாவித்திரி தாக்கூர் அவர்கள் ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுப்பதற்காக மத்திய அரசு 131.60 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும், இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.