ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

vinoth

வியாழன், 19 டிசம்பர் 2024 (09:09 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன. மூன்றாவது போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

இந்நிலையில் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் விரைவில் ஓய்வை அறிவிக்கலாம் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் வாய்ப்புக் கிடைக்குமென்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த போட்டிகளிலும் அவரால் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்றால் அவர் தேர்வுக்குழுவினரின் முடிவுக்காகக் காத்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

கடந்த 13 இன்னிங்ஸ்களாக ரோஹித் 152 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்