பாஜக கூட்டணியில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைய போவதாக கூறப்படும் நிலையில் அக்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரே இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு இந்தியா கூட்டணிக்கு செல்வோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக மற்றும் இந்தியா கூட்டணி ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் இல்லாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பாஜக கூட்டணியில் இணைய திட்டமிட்டது.
ஆனால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் இப்ராஹிம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜகவை வெல்ல இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தேர்தலில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அறிவித்த நிலையில் அவரது கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரே இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது