பிரபலமான சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவுகள் சரியாக கையாளப்படாததாக ஆஸ்திரேலிய அரசு அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் பிரபலங்கள் முதல் சாமானியர் வரை அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைதளம் எக்ஸ் (ட்விட்டர்). எலான் மஸ்க் இதை வாங்கியதில் இருந்து தொடர்ந்து சர்ச்சைக்கு மேல் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது எக்ஸ். முக்கியமாக எக்ஸ் தளத்தில் ஆபாச வீடியோக்கள் எந்தவித எச்சரிக்கையும் இன்றி பகிரப்படுவதால் சிறு வயதினரும் இதை பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பாலியல் சுரண்டல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பான பதிவுகள் மற்றும் செயல்பாடுகளை எக்ஸ் நிறுவனம் சரியாக கையாளவில்லை எனவும், இதுகுறித்த முறையான விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ.3.20 கோடியை அபராதமாக விதித்துள்ளது ஆஸ்திரேலியா.
மேலும் பல நாடுகளிலும் எக்ஸ் தளத்தின் தான் தோன்றி தனமான சட்டத்திட்டங்கள் விமர்சனங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.