காதலியிடம் ஜல்சா செய்த ரவுடி... நியாயம் கேட்க போன இளைஞர் கொலை !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (17:51 IST)
ஐதராபாத்தில் ஒரு இளைஞர் தனது பிறந்த நாள் அன்று,தனது நண்பர்களுடன் பார்டிக்கு சென்றுவிட்டு வந்துள்ளார். அப்போது ஒரு பொது இடத்தில் வைத்து  ஒரு காதல் ஜோடி ’சந்தோஷமாக’ இருந்துள்ளனர். இதைக் கேட்ட போன இளைஞர் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இச்சம்பவ்பம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சாகர்(13) என்பவர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து நெக்லஸ் சாலையில் ஒரு ஜோடி எல்லை மீறி ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தனர்.
 
இதைகண்டு ரட்சகன் பட  நகார்ஜூனா மாதிரி கொதித்த சாகர், அந்த நபரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த முரட்டு வாலிபர் , சாகரை கல்லால் தாக்கினார்.
 
இதில் பலத்த அடிபட்ட சாகர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து இறந்தார். அருகில் உள்ளோர் சாகரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சை பலினின்றி இறந்தார்.
 
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சாய் சாகடை தாக்கி கொன்ற ஜூனாயித் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும்,,அவர் ஒரு ரவுடி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரவுடையை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்