மாமுல் கேட்டு மிரட்டி, போலீஸை தாக்கிய ரவுடி! பரபரப்பு சம்பவம்

ஞாயிறு, 19 மே 2019 (14:51 IST)
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் ஒரு மளிகைக் கடையில் சாந்தகுமார் என்ற ரவுடி மற்றும் அவரது சகோதரரும் சேர்ந்து மாமூல் கேட்டு மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மளிகைக் கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி அங்குவந்த காவல்நிலைய ஏட்டு பாஸ்கரன் என்பவர் சாந்தகுமார் பிடிக்க முயன்றார்.
 
இதனால் கோபம் அடைந்த ரவுடி சாந்தகுமார் காவலரை திட்டி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
 
பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாகியிருந்த சாந்தகுமார் மற்றும் அவரது சகோதரர் சம்பத்தையும் கைதுசெய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்