தமிழகத்தில் மக்களவை தொகுதிகள் குறைக்கப்படுமா? அமைச்சர் அமித்ஷா விளக்கம்..!

Mahendran

புதன், 26 பிப்ரவரி 2025 (14:16 IST)
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டிய நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
 
மக்களவை தொகுதிகள் மறு சீரமைப்பு காரணமாக எட்டு தொகுதிகள் வரை தமிழகத்தில் குறையும் என்று பிரதமர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
 
இந்த நிலையில், கோவையில் இரண்டு நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். தொகுதி மறு சீரமைப்பு மூலம் எந்த ஒரு தென்னிந்திய மாநிலத்திற்கும் தொகுதிகள் குறைக்கப்படாது என்று ஏற்கனவே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
 
திமுகவின் தேச விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க போவது உறுதி என்றும் அவர் கூறினார்.
 
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்றும், பல்கலைக்கழகத்தில் கூட மாணவிகள் பாதுகாப்பாக சென்று வரும் சூழல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்