மும்பை முதல் சவூதி வரை கடலுக்கடியில் ரயில் திட்டம் : இந்தியாவில் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (20:11 IST)
உலகின் முன்னேறிய நாடுகளில் எல்லாம் கடலுக்கடியில் ரயில் திட்டம் மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக இங்கிலந்து , பிரான்ஸ் , சீனா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பானதாகவும் சிறப்பனதானவும் இந்தப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் வளர்ந்து வரும் நாடான நம் இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுடன் மும்பையை இணைப்பது தொடர்பாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
 
ஏற்கனவே தொழிநுட்பத்தில் புதுமை காண விரும்பும் அமீரகத்தில் உள்ள நாடுகளான துபாய், அபுதாபி  போன்றவை  ஹைப்பர்லூர் போக்குவரத்து மற்றும் பறக்கும் டாக்சி என்றுஅடுத்த நூற்றாண்டுக்கு தேவையான போக்குவரத்து  அறிமுகம் செய்வதில் முனைப்பாக உள்ளது.
 
பயணிகள் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு போக்குவரத்திற்காகவும் இந்த கடலடி போக்குவரத்து மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்