பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் காலமானார்

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (17:46 IST)
பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார் என பஜாஜ் குழும் தெரிவித்துள்ளது. 

 
தொழிலதிபரும் பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ராகுல் பஜாஜ் இன்று(சனிக்கிழமை) காலமானார். 83 வயதான அவர், இன்று மதியம் 2:30 மணிக்கு உயிரிழந்ததாக பஜாஜ் குழுமம் தெரிவித்தது. ஜூன் 1938 அன்று பிறந்தவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு நெருக்கமானவராக இருந்தார். 
 
1960-களில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ முடித்தவர், தன்னுடைய 30 வயதில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். பத்ம பூஷன் விருது பெற்றுள்ள ராகுல் பஜாஜ், ராஜ்ய சபா எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்