நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் மீதான பல்வேறு விவாதங்களும், பிற நிகழ்வுகள் குறித்த உரையாடல்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி, வாரிசு அரசியலால் மற்றவர் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, ஊழல் இருந்திருக்காது என்று பேசினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பதில் அளித்துள்ளார். அதில், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நிலவுவதாகவும், வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்றும் பிரதமர் கூறியிருந்தார். மேலும், பிகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குள் கொண்டு வராதது குறித்தும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
மேலும் மோடிக்கு குழந்தைகள் இல்லை. நிதிஷின் மகன், அரசியல் மீது வெறுப்பு கொண்டவர். பிரதமருக்கும் நிதிஷுக்கும் தலைமுறை தழைத்து, அவர்களின் அரசியல் மரபை முன்னெடுத்துச் செல்லட்டும் என ஒருவர் வேண்டிக்கொள்ள மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார்.