இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் ஏசி பேருந்து: மத்திய அமைச்சர் தொடக்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:36 IST)
இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் எலக்ட்ரிக் ஏசி பேருந்து: மத்திய அமைச்சர் தொடக்கி வைத்தார்!
இந்தியாவின் முதல் ஏசி டபுள் டெக்கர் எலக்ட்ரிக் பேருந்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மும்பையில் தொடங்கி வைத்தார் 
 
அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்த முதல் ஏசி எலக்ட்ரிக் பேருந்து இன்று முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. 230 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரி இந்த பேருந்தில் இருப்பதால் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை இந்த பேருந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை மாநகரத்தில் இதுபோன்று  200 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது 50 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் மீதமுள்ள பேருந்துகள் அடுத்த ஆண்டில் டெலிவரி செய்யப்படும் என்றும் அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இந்த பேருந்துகளை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்