கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

Prasanth Karthick

வெள்ளி, 14 மார்ச் 2025 (09:15 IST)

இன்றும் நாளையும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி வங்க கடல் கடற்படை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவிற்கு இலங்கை, தமிழக மக்கள் சென்று கலந்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அவ்வாறாக அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

 

இன்று மாலை கொடியேற்றமும், அதை தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலியும் நடைபெற உள்ளது. நாளை இலங்கை, இந்திய பிஷப்புகள் தலைமையில் திருப்பலி நடைபெற உள்ளது. இதற்காக இன்று 100 படகுகளில் சுமார் 3 ஆயிரம் மக்கள் கச்சத்தீவு செல்வதால் ராமேஸ்வரம் கடல் பகுதியை முழுவதுமாக இந்திய கடற்படை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.

 

இந்திய கடற்படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு நாட்களுக்கு ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்