இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

Mahendran

வியாழன், 16 மே 2024 (18:03 IST)
பொதுவாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி தான் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 14 இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படங்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது 
 
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேர் அவர்களது படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது 
 
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்