இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran

புதன், 13 ஆகஸ்ட் 2025 (16:35 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக நிலவிவந்த கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை மற்றும் ஏழு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அத்துடன், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இந்த காரணங்களால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றிரவு கீழ்க்கண்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது:
 
தென்காசி: இந்த மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
 
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்: இந்த நான்கு மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
நீலகிரி, திருநெல்வேலி, சிவகங்கை: இந்த மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்