சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

Siva

வியாழன், 27 மார்ச் 2025 (13:28 IST)
இந்தியா - ரஷ்யா கடற்படைகளின் கூட்டு பயிற்சிக்காக, ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து நடத்தும் கடற்படை பயிற்சி முதன்முதலாக 2003ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 20 ஆண்டுகளாக இந்த கூட்டுப் பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி சென்னை கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக, ரஷ்யாவின் பசுபிக் பெருங்கடல் அணியில் சேர்ந்த போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்துசேர்ந்துள்ளன.
 
இந்த பயிற்சி இரண்டு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், இந்திய-ரஷ்ய கடற்படை அதிகாரிகள் இணைந்து செயல்படும் முறைகள் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர். இதில் விளையாட்டு போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செயல்பாடுகளும் இடம்பெற உள்ளன. இரண்டாம் கட்டமாக, அடுத்த வாரம் வங்களா விரிகுடா கடலில் இருநாடுகளின் போர்க்கப்பல்கள் ஒருங்கிணைந்த பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்