20 ஆப்கன் சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்.. சிஏஏ சட்டத்தின் கீழ் வழங்கல்..!

Siva
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:34 IST)
சிஏஏ சட்டத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் வாழும் 20  சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 20 சீக்கியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 நாட்களுக்கு முன்னர் இந்த 20 பேரும் இந்திய குடியுரிமை வேண்டி ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில், அவர்களது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு தற்போது குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தியாவில் நீண்ட கால விசாவின் கீழ் தங்கி இருந்த இவர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து வந்த நிலையில் தற்போது சிஏஏ சட்டத்தின் மூலம் இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது என்பதும் இதன் மூலம் இந்திய பாஸ்போர்ட்டுக்கும் இவர்கள் விண்ணப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றில் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இந்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்