சீனாவை தொடர்ந்து எல்லையை அபகரிக்கும் நேபாளம்! – இந்தியா கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (09:12 IST)
சீனாவை தொடர்ந்து நேபாளமும் இந்திய எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதற்கு இந்தியா கண்டனங்களை தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் இருநாட்டு படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எல்லைப்பகுதியில் இந்தியா மேற்கொள்ளும் மேம்பாட்டு பணிகளை சீனா தொந்தரவு செய்து வந்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தையால் ராணுவங்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த பதட்டம் அடங்குவதற்கும் நேபாளம் அடுத்த எல்லை பிரச்சினையை தொடங்கியுள்ளது.

உத்தரகாண்ட் எல்லையையொட்டிய இந்திய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியதூரா ஆகியவற்றை நேபாளம் தங்களது பகுதிகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அவை இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் என இந்தியா விளக்கமளித்துள்ளது. ஆனாலும் அதற்கு செவிசாய்க்காமல் அந்த பகுதிகளை தங்கள் எல்லைக்குள் இணைத்து புதிய வரைபடத்தை நேபாளா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எந்தவித வரலாற்று ஆதாரங்களும் இல்லாமல் நேபாளம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு வருவதாக செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக நேபாளம் செயல்படுவதாகவும் இந்தியா எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்