40 இடங்களில் அதிரடி ரெய்டு! – கலகலத்துப் போன கல்கி ஆசிரமம்!

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (17:47 IST)
புகழ்பெற்ற கல்கி பகவானுக்கு சொந்தமான 40 ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் கல்கி பகவான் ஆசிரமும் ஒன்று. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள இந்த ஆசிரமத்திற்கு சென்னை உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் 40 கிளைகள் உள்ளன.

இந்நிலையில் கல்கி ஆசிரமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரி துரையினர் இன்று ஒரே நாளில் கல்கி ஆசிரமத்தின் அனைத்து கிளைகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் நடைபெற்ற இந்த சோதனையில் கல்கி மகன் கிருஷ்ணனின் அலுவலகத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கல்கி ஆசிரம பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்