தேசத்தந்தைன்னு சொன்னது குத்தமா? இஸ்லாமிய தலைவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (19:22 IST)
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை தேச தந்தை என வாழ்த்திய இஸ்லாமிய தலைவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக இருந்து வருபவர் மோகன் பகவத். சமீபத்தில் மோகன் பகவத்தை ஒரு விழாவில் புகழ்ந்து பேசிய அகில இந்திய இமாம்களின் அமைப்பின் தலைவரான உமர் அகமது இல்யாசி, அவர் இந்த நாட்டிற்கு தேச தந்தையை போன்றவர் என புகழ்ந்து பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு இஸ்லாமியர்களே பலர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இமாமுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள இமாம் அகமது இல்யாசி “எனக்கு பாதுகாப்பு அளித்த இந்திய அரசுக்கு என் நன்றிகள். இங்கிலாந்தில் இருந்து கூட எனக்கு கொலை மிரட்டல் வந்தது. இந்தியா செழிப்படைவதை காண சகிக்காத விரோத சக்திகள்தான் இத்தகைய மிரட்டல்களை விடுக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்