யூடியூப் சேனல்கள், 45 வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு !

திங்கள், 26 செப்டம்பர் 2022 (21:53 IST)
இந்தியாவின்  தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு தொடர்பான செய்திகள் பரப்பிய 10 யூடியூப்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள்ளடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2010ன்படி அனுமதி வழங்குவதாகவும்  ஏற்கனவே அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து, அதன்படி, பல யூடியூப் சேனல் கள் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு , ஒழுங்கு குறித்து, தவறான செய்திகள் பரப்பியதாக 10 யூடியூப் சேங்களையும் அதில் இருந்து 45வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் முடக்கியுள்ளது.

இந்த வீடியோக்களை சுமார் 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதாகவும், மத்திய புலனாய்வு அமைப்பின் தகவலின்படி இந்த நடவடிக்கையை  மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்