37 மத்திய விருதுகள் ரத்து; நோபல் லெவலுக்கு புதிய விருது? – ஆலோசனையில் அமைச்சகம்!

புதன், 28 செப்டம்பர் 2022 (09:00 IST)
மத்திய அரசின் சார்பில் அறிவியல் துறைகளில் வழங்கப்படும் ஏராளமான விருதுகளை குறைத்துவிட்டு, நோபல் போல அதிக அந்தஸ்து கொண்ட விருதை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மத்திய அரசின் விருதுகள் குறித்து சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருது வழங்கும் முறையையும் மாற்றி அமைக்குமாறும், விருது வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும்படியும் பேசியிருந்தார்.

மத்திய அரசின் சார்பில் தற்போது தனி நன்கொடை விருது, உள்விருதுகள் மற்றும் பெலோஷிப் என 300க்கும் மேற்பட்ட விருதுகள் அறிவியல், மருத்துவ பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து 8 விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத்துறைகளுடன் பேசிய மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, ஏராளமாக வழங்கப்படும் சிறிய விருதுகளை குறைத்து, அனைத்து அறிவியல் பிரிவுகளிலும் நோபல் பரிசு போல ”விஞ்ஞான் ரத்னா” என்ற அந்தஸ்து மிக்க விருதை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் சிறிய அளவில் வழங்கப்படும் 37 வகையான விருதுகளை ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்