வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

Siva

திங்கள், 20 அக்டோபர் 2025 (17:28 IST)
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடதமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக, அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மிக கனமழை எச்சரிக்கையாக 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
 
இன்றும்  நாளையும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வங்கக் கடலில் உருவாகும் இந்த புதிய புயல் சின்னத்தால் வடதமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்