பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

Siva

திங்கள், 20 அக்டோபர் 2025 (19:10 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் கழக்கூட்டம் பகுதியில் உள்ள பெண்களின் விடுதி ஒன்றில் ஐடி ஊழியர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், மதுரையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
அக்டோபர் 17 அன்று அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில், விடுதி அறையில் தூங்கி கொண்டிருந்த ஐடி ஊழியர் ஒருவர், பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டார். பெண் எதிர்த்ததால், குற்றவாளி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
 
ஆரம்பத்தில் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதித்து, குற்றவாளியையும் அவரது வாகனத்தையும் அடையாளம் கண்டதாகத் துணை போலீஸ் கமிஷனர் ஃபராஷ் டி. ஐபிஎஸ் தெரிவித்தார். வேலைக்காக கேரளா வந்த லாரி ஓட்டுநர்தான் கைது செய்யப்பட்ட நபர்.
 
இந்த சம்பவத்தையடுத்து, கழக்கூட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் முறையான அனுமதியுடன் இயங்குவதை உறுதிசெய்யவும், போதிய பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்