கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva

திங்கள், 20 அக்டோபர் 2025 (19:00 IST)
உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில்,   தனது கணவரின் தம்பியை, அண்ணி கத்தியால் குத்தி, அவரது பிறப்புறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மௌயிமா கிராமத்தை சேர்ந்த உமேஷ் என்ற 20 வயது இளைஞர், தனது அண்ணி மஞ்சுவின் தங்கையுடன் நெருங்கி பழகி, பின்னர் குடும்ப எதிர்ப்பால் அந்த உறவை முறித்து கொண்டார். இதனால் மனமுடைந்த தங்கையின் துயரத்தை பார்த்த மஞ்சு, உமேஷ் மீது பழிவாங்கத் திட்டமிட்டார்.
 
அக்டோபர் 16 நள்ளிரவில், வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது, மஞ்சு சமையலறை கத்தியுடன் உமேஷின் அறைக்குள் நுழைந்தார். அவரை பலமுறை குத்திவிட்டு, அவரது பிறப்புறுப்பை துண்டித்தார். உமேஷின் அலறல் கேட்டு குடும்பத்தினர் வருவதற்குள் மஞ்சு தப்பி ஓடிவிட்டார்.
 
ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட உமேஷுக்கு ஒன்றரை மணி நேர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவரது நிலை சீராக உள்ளது. விசாரணையில், மைத்துனர் மீதுள்ள ஆத்திரத்தால் மஞ்சு இத்தாக்குதலை நடத்தியது உறுதியானது. தலைமறைவாக உள்ள மஞ்சுவைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உமேஷ் குணமடைய 7 முதல் 8 மாதங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்