திருப்பதி ஏழுமலையானுக்கு 250 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுக்கும் பெங்களூரு பக்தர்..!

செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:54 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன்னுடைய 250 ஏக்கர் நிலத்தை கொடுக்க பக்தர் ஒருவர் முன்வந்துள்ள செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூரை சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் பக்தர் என்பதும் அவர் தன்னிடம் உள்ள விவசாய நிலம் 250 ஏக்கர் நிலத்தை ஏழுமலையானுக்கு நன்கொடையாக கொடுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதற்கான ஆவணங்களை அவர் தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. 250 ஏக்கர் நிலத்தை தேவஸ்தான பெயருக்கு பத்திர பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
முரளி கிருஷ்ணா என்ற பக்தர் கொடுக்கும் 250 ஏக்கர் நிலத்தில் கோயிலுக்கு தேவையான தானியங்கள், மலர்கள் ஆகியவற்றை பயிருடுவது குறித்து ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. 
 
ஏற்கனவே சென்னையில் நடிகை காஞ்சனா திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொடுத்த நிலத்தில் தான் தற்போது பத்மாவதி தாயார்  கோயில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்