பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சுவலி.. பயணிகளை பாதுகாப்பாக இறக்கியவுடன் மரணம் அடைந்த டிரைவர்..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:30 IST)
பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததை அடுத்து அவர் நெஞ்சுவலியுடன் பாதுகாப்பாக பேருந்து உரிய இடத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டவுடன் உயிரிழந்த சம்பவம் வெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
குஜராத் மாநில அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து வருபவர் பர்மால் அஹிர். நாற்பது வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இரவு எட்டரை மணி அளவில் பஸ்சை எடுத்து உள்ளார். அந்த பஸ்ஸில் உள்ள அனைவரையும் ராதன்பூர் நகரில் அவர் இறக்கி விட வேண்டும் என்ற நிலையில் திடீரென பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோதே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் வேறு எங்கு வண்டியை நிறுத்தாமல் நெஞ்சுவலி பொறுத்துக் கொண்டே உரிய இடத்திற்கு வந்தவுடன் பாதுகாப்பாக பயணிகளை இறக்கினார். அதன் பிறகு அவர் அவர் சில நிமிடங்களில் சீட்டிலேயே சரிந்து விழுந்து விட்டார். இதனை கவனித்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று டாக்டர்கள் கூறினர். 
 
கடும் நெஞ்சுவலியையும் பொறுப்பெடுத்தாமல் பயணிகளை பாதுகாப்பாக உரிய இடத்தில் இறக்கி விட்டு விட்டு அதன் பின் உயிரிழந்த அவரது செயல் காரணமாக பயணிகள் சோகமடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்