மத்திய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து போராட்டம் - முதல்வர் அறிவிப்பு

செவ்வாய், 21 மார்ச் 2023 (19:37 IST)
மத்திய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து வரும் மார்ச் 29 மற்றும் 30 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள்  மேற்கு வங்கம் மாநிலத்தில்  போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 

சமீபத்தில், மத்திய பாஜக அரசு  நாடாளுமன்றத்தில்  பட்ஜெட் தாக்கல் செய்தது.  இதில், மேற்கு வங்க மா நிலத்திற்கு எந்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கான உரிய தொகையைத் தராமல் நிறுத்திவிட்டது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில்,  எங்கள் மாநிலத்திற்கு என்று எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால், மேற்கு வங்காள மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து வரும் மார்ச் 29 மற்றும் 30 ஆம் தேதி அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்