'' நாகலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்''…பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (23:14 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் அடுத்தாண்டு, பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது.

அதேபோல், விரைவில் ராஜஸ்தான், கர்நாடக, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது.

 நாகலாந்தில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது.

தற்போது,  நாகலாந்தில்  பாஜக கூட்டணியில் என்டிபிபில் கட்சியின் ரியோ முதல்வராக உள்ள நிலையில், வரும் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுள் காங்கிரஸ் ஆகிய  கட்சிகள் இயையே போட்டி அதிகரித்துள்ளது.

எனவே மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கி., தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர்  ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையில், தாய்,சேய் நலத்திற்காக தனிப்பிரிவு அமைக்கப்படும் என்றும்   உஜ்வாலா திட்டத்தில் 2 கேஸ் சிலிண்டர் தரப்படும், மாணவிகளுக்கு கல்வி இலவசம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்