துடிப்பான ஜனநாயகத்திற்கு உதாரணம் இந்தியா- ஐநா சபையில் பிரதமர் மோடி உரை

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (20:55 IST)
தந்தைக்கு டீக்
கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான் தற்போது  உரையாற்றிக் கொண்டிருக்கிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .

இந்திய பிரதமர் மோடி  சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். அப்போது அவர் அந்நாட்டு அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் அவர் தற்போது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 76 வது அமர்வில் உரையாற்றியார். அப்போது, ஜனநாயகத்தின் தாய் எனக்கூறப்படும் ஒரு நாட்டை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் எனத் தெரிவித்தார். மேலும் ஒரு துடிப்பான ஜனநாயகத்திற்கு இந்தியா ஒரு உதாரணம் எங்களின் ஜனநாயகம் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர் இந்தியாவை உலகில் பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதற்காக வேலைகளில் இறங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்