இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக தனது மதிப்பை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தி இன்று 27 காசுகள் அதிகரித்து ரூ.85.37 ஆக பதிவாகியுள்ளது. இந்த உயர்வு, உள்நாட்டு பங்குகள் மற்றும் வெளிநாட்டு நிதி வரத்து போன்ற காரணிகளின் அடிப்படையில் ஏற்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.48 இலிருந்து வர்த்தகத்தை தொடங்கி, அதிகபட்சமாக ரூ.85.31 என பதிவு செய்யப்பட்டு, பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.62 ஐ தொட்டது. இறுதியில், 16 காசுகள் அதிகரித்து ரூ.85.37 ஆக முடிவடைந்தது.