பசியால் மண்ணை அள்ளித் தின்ற குழந்தைகள்... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:15 IST)
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில்  பசியால் குழந்தைகள், மண்ணை அள்ளித் தின்ற சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள  மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பாதிக்கும் பனத்ஹ்டை குடித்தே அழித்து வருவதாகத் தெரிகிறது. அதனால் மனைவிக்கு பணம் தராததால் குடும்பம்  வறுமையில் உழன்று வந்தது.
 
இந்நிலையில் இன்று அவரது குழந்தைகள், சாப்பிட உணவு இல்லாததால் மண்ணை அள்ளித் தின்றனர். அதை  ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம்  உடனடியாக அங்கு சென்று குழந்தைகளுக்கு தேவையனா உணவுபொருட்களும் உதவிகளும் செய்தனர்.
 
மேலும், ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் ஒரு பணிக்காக நியமன ஆணை வழங்கியுள்ளா மாநரகராட்சி மேயர். அதேபோல் அவருக்கு விரையில் ஒரு கட்டிக்கொடுக்கப்படுவதாகவும், அவரது குழந்தைகள் கல்விக்கு போதுமான உதவிகள் அளிக்க  மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்